சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேடு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இவைகளை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம் பேரூராட்சி, கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் இந்த ஸ்டாலின் ஆட்சியில் சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு தமிழகத்தில் கொலை கொள்ளை கஞ்சா கற்பழிப்பு என சட்ட ஒழுங்கு சீர்கேடு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இவைகளை கண்டித்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் பதார்த்தைகளை ஏந்தி ஸ்டாலின் அரசை கண்டித்து கோசம் எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியை மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை கே. சி. சரவணன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் முருகதாஸ், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் டாக்டர் ரங்கராஜன், பெரும்பாக்கம் விவேகானந்தன், கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஜெயராஜ், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன், இவர்கள் ஏற்பாட்டில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.