செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய படூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இயற்கை உரத்தால் விளைவித்த காய்கறிகள், கீரைவகைகள், தானியங்கள், ரசாயன கலப்பில்லா எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் சந்தை அமைக்கப்பட்டது.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த சுற்று சூழல் பாதிபில்லாத வீட்டு உபயோக பொருட்கள் மதிப்பு கூட்டு உணவு பண்டங்களையும் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் ஊரக வளர்ச்சி துறை செயலாளரும், கூடுதல் தலைமை செயலாளருமான ககன் தீப்சிங் கலந்துக்கொண்டு சந்தையை திறந்து வைத்து அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
மேலும் அங்கு அமைக்கப்பட்ட அன்பு குடில் எனும் புத்தகங்கள், துணிகள், குளிர்சாதன பெட்டியில் பழங்கள், காய்கறிகள், உணவு பொருட்களை வைத்து விட்டு செல்வதும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எந்த நேரத்திலும் இலவசமாக எடுத்து செல்லும் விதமாக அமைக்கப்பட்டதையும், அதுபோல் ஒரு ரூபாய் நாணையம் செலுத்தினால் நாப்கின் வழங்கும் இயந்திர திட்டத்தையும் பார்வையிட்ட ககன் தீப்சிங் முன்மாதிரியாக செயல்படும் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகரை வெகுவாக பாராட்டினார்.