செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கம் பகுதியில் தணியாருக்கு சொந்தமான ராயல் ஓக் என்ற பர்னிச்சர் கடையில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமர் வயது 41 என்வபவர் நேற்று மாலை இந்த பர்னிச்சர் கடையில் செக்யுரிட்டியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருடன் சென்னை வேளச்சேரியை சேர்ந்த அசோக் என்பவர் இவருடன் இருந்தாக கூறப்படுகிறது. அதேபோல் இவர்கள் இருவரும் நேற்று இரவு இரண்டாவது தளத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் ஆத்திரமடைந்த அசோக் அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். தகவல் அறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கை ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் திருப்போரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை எதற்காக நடைபெற்றது இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.