செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கடம்பூர் பகுதியைச் சேர்ந்த யாகேஸ்வரன் என்ற கல்லூரி மாணவனும் கூடலூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சபரீனா இருவரும் காதலர்கள் என தெரிகிறது இன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற காதலி சபரீனா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் அவரை அருகே இருந்த பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி செய்த போது மாணவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதனைக் கேட்ட காதலன் யாகேஸ்வரன் காதலி இறந்த துக்கம் தாங்காமல் வேகமாக ஓடி சென்று கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற பாண்டிச்சேரி அரசு பேருந்து முன் பாய்ந்ததில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் உடல் 2 துண்டுகளாக ஆகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி இரு உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.