கோவளம் ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு

56பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றிய கோவளம் ஊராட்சியில். சாலையில் அடிக்கடி விபத்துக்களும், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்சம்பங்களும் நடக்கின்றன பொதுவாகவே, தன் சொந்த ஊரான கோவளத்தை முழுபாதுகாப்பு வளையத்தில் கொண்டுவர, சிசிடிவி கேமரா அமைக்க அப்பகுதியை சேர்ந்த எஸ். டி. எஸ். , பவுண்டேசன் நிறுவனர் சுந்தர் முடிவு செய்தார்.
இதற்காக, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம், கேளம்பாக்கம் போலீசாரிடம் ஆலோசனை செய்து 25. 63 லட்ச ரூபாய் மதிப்பில் இ. சி. ஆர். சாலை முதல் கோவளம்-கேளம்பாக்கம் சந்திப்பு சாலை, குன்றுக்காடு சந்திப்பு செம்மஞ்சேரி சந்திப்பு கடற்கரை பகுதி, மீன் மார்க்கெட்பகுதி, வழிபாட்டு தலங்கள், முக்கிய தெருக்கள் என பல்வேறு இடங்களில் 61 நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமரா பொருத்தும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே, பணி முடிந்த கடற்கரை பகுதியில் மீன் திருட்டு, பைக் திருட்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அனைத்து பகுதிகளிலும் கேமரா பொருத்தி அதன் அனைத்து இணைப்புகளும் ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் இணைக்கப்பட்டுள்ளது அதனை ஊராட்சி மன்றத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காணிப்பு அறையினை திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி