மலைப்பிள்ளையாருக்கு தொல்லியல் துறை சார்பில் சிறப்பு அபிஷேகம்

73பார்த்தது
மாமல்லபுரத்தில் 16-ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கணேச ரதத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைப் பிள்ளையாருக்கு சதுர்த்தியை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அருகம்புல் மாலை அலங்காரத்தில் அருள்பாளிப்பு.

சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தரிசனம்!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை புராதன சின்ன வளாகத்தில் அமைந்துள்ள, கணேச ரதம் 16-ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒற்றைக்கல் ரதமாகும். இந்த கணேச ரதத்தில் உள்ள கர்ப்ப கிரகத்தில் 5 அடி உயர மலைப்பிள்ளையார் சிலை பல நூறாண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாமல்லபுரம் தொல்லியல் துறை சார்பில் புகழ் பெற்ற இந்த மலைப்பிள்ளையாருக்கு பஞ்ச கவ்விய அபிஷேக பொருட்களால் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம், மற்றும் அருங்கம்புல் மாலை அலங்காரம் நடந்தது. மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை, கணேச ரதத்தை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் பலர் இந்த மலைப்பிள்ளையாரை சாமி தரிசனம் செய்தனர். சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தொல்லியல் துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தால் இன்று கணேச ரதம் வளாகம் களைகட்டி காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி