திருப்போரூரில் பாமக சார்பில் மருத்துவ முகாம்

85பார்த்தது
பாராளுமன்ற உறுப்பினரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளில் மருத்துவ முகாமுடன் கல்வி உபகரண பொருட்களை வழங்கி மாணவருடன் மரக்கன்றை நடவு செய்த வன்னியர் சங்க மாநில துணைப் பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய காயார் ஊராட்சியில் பாமக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்கம் மாநிலத் துணை பொது செயலாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களை வழங்கி பசுமையை ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவியருடன் இணைந்து மரக்கன்றை நடவு செய்தார் நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் என் எஸ் ஏகாம்பரம் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி