பாதுகாப்பு இன்றி குப்ப வண்டியில் செல்லும் தூய்மை பணியாளர்கள்

71பார்த்தது
மருத்துவ முகாமிற்கு பாதுகாப்பு இன்றி குப்ப வண்டியில் செல்லும் தூய்மை பணியாளர்கள்


குப்ப வண்டியில் செல்லும் தூய்மை பணியாளர்கள் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டபல்வேறு ஊராட்சிகளில்பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமிற்கு வருகை தந்து உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த மருத்துவ முகாமிற்கு மொறப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் குப்பை எடுத்துச் செல்லும் வாகனத்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.


இதுபோன்ற மருத்துவ முகாம்களுக்கு தூய்மை பணியாளர்களை முறையாக ஊராட்சி மன்ற நிர்வாகம் அழைத்துச் செல்லாதது இது போன்ற நிலைகளுக்கு காரணம் என பொதுமக்களும் சமூக நலனும் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி