சாலையில் பைக் ஓட்டிய நபர் பள்ளத்தில் விழுந்து மரணம் (Video)

66பார்த்தது
சென்னை வேளச்சேரியில் மாநகர பேருந்து ஓட்டுனரான முருகேசன் என்பவர் இன்று (அக். 9) தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தார். அந்த சமயத்தில் முருகேசன் மீது அருகில் வந்த பேருந்து லேசாக உரசிய நிலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி