சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் நீர்நிலைப் பகுதியில் கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசு அடைவதாக பொதுமக்கள் புகார்.!!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி, சத்யா நகர், ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், என நாள்தோறும் 3 டன்னிற்கும் மேலாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது
சேகரிக்கப்படும் குப்பைகளை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருத்தேரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் அனைத்து விதமான கழிவுகள் குப்பைகளை ஏரி நீர் பிடிப்பு பகுதியில் கொட்டுவதால் ஏரி நீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
உடனடியாக நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.