செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவதூர் ஊராட்சியில் அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தலைமை கழக பேச்சாளர் சுந்தரபாண்டியன் இவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் பேசுகையில் இந்த திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பழக்கங்கள் அதிகரித்து வருகிறது. அதே போல் பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளது.
இதை தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மின் கட்டண விலை ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டே வருகிறது. இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என பேசினார். சட்டமன்ற உறுப்பினர் பேசுவியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என பேசினார்.