நெற்குணம் பகுதியில் புதிய கல்குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

82பார்த்தது
மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள
கல்குவாரியை எதிர்த்து
பொதுமக்கள் பதாகைகள்
ஏந்தி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள
நெற்குணம் பஞ்சாயத்துக்குட்பட்ட
பகுதியில் சுமார் 5000-க்கும்
மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரின் பிரதான தொழில் விவசாயமாகும்.
சுமார் 2000 ஏக்கர் நில பரப்பில்
விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விவசாய
பணியில் கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் கிராம மக்கள் அனவைரும் வாழ்ந்து வருகின்றனர்.

கிராம மக்களின் வாழ்வதாரம் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் தெரிவிக்கின்றனர். தற்போது நெற்குணம் பஞ்சாயத்துக்குட்பட்ட வயலூர் கிராமத்திலும் அதனை ஒட்டியுள்ள புளியணி மற்றும் தூதுவிளம்பட்டு ஆகிய கிராமங்களில் கல்குவாரி மற்றும் கல் அறவை செய்யும் இயந்திரங்கள் அமைப்பதற்கு தனி நபர்கள் அனுமதி கோரி
விண்ணப்பம் செய்துள்ளனர்.

அந்த மனுவிற்கு
கிராம பொது மக்களின் கருத்து மற்றும் ஆட்சேபனைகளை கேட்காமல் அரசு துறைகளின் அதிகாரிகள்
தன்னிச்சையாக செயல்பட்டு
வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி