வேடந்தாங்கல் ஊராட்சியில் மதுராந்தகம் தீயணைப்பு துறை சார்பாக வடகிழக்கு பருவ மழை மற்றும் வெள்ளம் மீட்பு பணிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தீயணைப்பு துறை சார்பாக வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வளையபுத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் மீட்பு பணிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு குழுவினர் வடகிழக்கு பருவ மழையின் போது பொதுமக்கள் எவ்வாறு அவர்களைக் காப்பாற்றிக் கொள்வது.
பொதுமக்கள் பருவ மழையின் போது ஒரு லிட்டர் வாட்டர் கேன், தர்மாகோல், 20 லிட்டர் தண்ணீர் கேன், லாரி ட்யூப், வாழைமரம் ஆகியோர்களைக் கொண்டு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால் எவ்வாறு நம்மளை காப்பாற்றிக் கொள்வது குறித்து பொது மக்களுக்கு தீயணைப்பு குழுவினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.