திருப்பூரில் இருந்து கோவைக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கோவை அருகே சென்ற போது பலமாக காற்று வீசியதன் காரணமாக பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி விழுந்தது. பேருந்தின் வேகம் காரணமாக உடைந்த கண்ணாடி பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் மீது விழுந்தது. கண்ணாடி விழுந்து கை மற்றும் முகத்தில் கீறி ரத்தம் வழிந்தோடியபோதும் பேருந்து விபத்துக்குள்ளாகாமல் பயணிகள் அனைவரையும் ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார்.