அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு

72பார்த்தது
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு.

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய் வார்டு, சர்ஜரிக்கள் பிளாக் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ஜோதிகுமார் மற்றும் அறுவை சிகிக்சை மருத்துவர்களின் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைதொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைப்பெற்ற நோயாளிகள் நலச்சங்கம் தொடக்க கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் நோயாளிகள் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி