அமைச்சரிடம் கண்ணை கட்டிக்கொண்டு சமூக ஆர்வலர்கள் மனு

52பார்த்தது
குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலைகள், எரியாத மின்விளக்குகள், நிதி ஒதுக்கி‌யும் அமைக்கப்படாத சிக்னல்களை சீரமைக்கும் வரையில் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என அமைச்சரிடம் கண்ணை கட்டிக்கொண்டு சமூக ஆர்வலர்கள் மனு

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை உள்ள ஜி. எஸ். டி. சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரிவதில்லை, இருள்சூழ்ந்த நிலையில் எண்ணற்ற சாலை விபத்துக்களும் உயிர் சேதங்களும் நடைபெறுகிறது. இதனோடு இரவில் வழிப்பறி போன்ற குற்றசம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

மேலும், பொதுமக்கள் சாலையை கடக்கும் திருத்தேரி போன்ற சந்திப்புகளில் சிக்னல் அமைக்க ரூபாய் 7. 5 லட்சம் நிதி ஒதுக்கியும் சிக்னல் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் மிக்ஜாம் புயலுக்கு பிறகு மிக மோசமாக சிதலமடைந்த பரனூர் to பெருங்களத்தூர் சாலைகளை செப்பணிடாமல் ஏராளமான இருசக்கர வாகன விபத்துக்களுக்கு வழிவகுக்கும் போக்கை கண்டித்தும் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு‌ சமூக ஆர்வலர்கள் அமைச்சர் தா. மோ‌‌. அன்பரசனிடம் மனு வழங்கினர். மேலும், இந்த மூன்று பிரதான பிரச்சினைகளை சரிசெய்யும் வரை பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய கூடாது என கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி