சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற லாரி உரிமையாளர் சங்கத்தினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
அதிகாரம் பாரம் ஏற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக முழுவதும் வாகனத் தணிக்கை என்ற பேரில் போக்குவரத்து காவல்துறை நடத்தும் லஞ்ச பாரத்தை கைவிட வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஹிட் & ரன் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், காலாவதியான முப்பத்தி ரெண்டு சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.