ஆலந்தூர் - Alandur

மறைமலைநகரில் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின் கம்பங்கள்

மறைமலைநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின் கம்பங்கள். அலட்சியத்துடன் மின்சாரத் துறை அதிகாரிகள் வேலை செய்வதாக மக்கள் புகார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் இடையே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பங்கள் உள்ளன.  இங்குள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து எலும்பு கூடுகளாக காட்சியளிக்கின்றன. இந்தப் தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் சுமார் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நிலையில் இந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதால் எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் செல்கின்றனர். எனவே மிகவும் ஆபத்தான நிலையில் உடைந்து சிதறி கிடக்கும் இந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்படும் முன்பு கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அதேபோல இந்த பகுதியை பலமுறை மின்சாரத்துறை அதிகாரிகள் கடந்து சென்று இருப்பார்கள். இதுவரை ஏன் அவர்கள் குடும்பத்தை ஆய்வு செய்து வேறு கம்பங்களை மாற்றவில்லை எனவும் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த மின்சாரத்துறை ஊழியர்கள் அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా