மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்

71பார்த்தது
மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா!


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் அவர்கள் தலைமையில் சிதண்டி கிராமத்தில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், எம். எல். ஏ. மான க. சுந்தர், தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பெரிய கோடீஸ்வரன், ஆகியோர் பங்கேற்று பேசினர். மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டவருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி