அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில், பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், தண்ணீர் பந்தல்கள் திறக்க வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி. சோமசுந்தரம் ஏற்பாட்டில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தீர்ககும் வகையில், தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம், பனை நுங்குகளை மலை போல் குவிக்கப்பட்டு , பிரம்மாண்டமான பழக் கடையை போலும், கரும்பு ஜூஸ், கூழ், மோர் உள்ளிட்டவைகளுடன் சாலையோர பழச்சாறு கடை போலும், இளநீர், நுங்கு, ஈச்சம்பழம், வாழைப்பழம் உள்ளிட்டவைகளை தோரணங்கள் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்சையில் அதிமுக அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாநில எம். ஜி. ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் எஸ். எஸ். ஆர். சத்யா,
அதிமுக நிர்வாகிகள் வள்ளிநாயகம், கே. யு. எஸ். சோமசுந்தரம், வி. ஆர். மணிவண்ணன், திலக்குமார், சிறுவாக்கம் ஆனந்தன், பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.