செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 57. மறைமலைநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலை நீரேற்று நிலையத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்குச் சென்ற குமார், அங்கிருந்த சிமென்ட் ஷீட் கூரை மீது ஏறி, குவிந்திருந்த குப்பையை அகற்றினார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமென்ட் ஷீட் உடைந்து, குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, பொத்தேரியில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த மறைமலைநகர் போலீசார், குமார் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.