நெம்மேலியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி மனு

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூர் ஆதிதிராவி டர் பகுதியில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி குடியிருப்பையொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் அந்த நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இங்கு, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பகுதியில் அரசு பசுமை பண்ணையும் இயங்கி வருகிறது. இந்நிலையில், மீதமுள்ள, 5 ஏக்கர் மேய்கால்புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், அவற்றை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட பேரூர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி