ஆடல், பாடல், நடனம், யோகா என 100 பேர் ஒரே மேடையில் தொடர்ந்து 25 நிமிடம் செய்து உலகசாதனை படைத்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் KTAS என்ற பெண்கள் தொழில்முனைவோர் நிறுவன சார்பில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 4 வித கலைகளை செய்யும் ஐன்ஸ்டின் உலகசாதனை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதன்படி 100 பேர் ஒரே மேடையில் பாடல், ஆடல், நடனம், யோகா மற்றும் பேஷன் ஷோ ஆகியவறை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. சுமார் 25 நிமிடம் இடைவெளியின்றி நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்களது தனி திறமை வெளிப்படுத்தினர். மாணவர்களின் இந்த முயற்ச்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. ஒரே நேரத்தில் 4 கலைகளும் ஒரே மேடையில் செய்து அசத்தியதால் ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் இதனை புதிய உலகசாதனையாக அங்கீகரித்தது.
சாதனை படைத்த பெண் தொழில்முனைவோர் கிருத்திகாவிற்கு, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் உலகசாதனை விருது வழங்கி கவுரவித்தார். அதேபோல் உலகசாதனையில் ஈடுபட்ட 100 பேருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.