
பழனி கோயிலுக்கு புதிய பேட்டரி பஸ்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேட்டரி வாகனங்களை தனியார் நிறுவனங்கள் கோயில் நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஏப்.4) பக்தர்கள் வசதிக்காக புதிய பேட்டரி பேருந்தை தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் வழங்கியது. பாலவிநாயகர் கோயில் முன்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக பேருந்து சேவை இயக்கப்பட்டது.