பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் விநாயகர் சதுர்த்தி தொடர்விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 39 நாட்களில் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூபாய் 3 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரத்து 873 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1, 237 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 638 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1, 012 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் இன்றும் உண்டியல் என்னும் பணி தொடர்கிறது பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.