பழனி: ஆயக்குடி கொய்யா பழம் கிலோ 150 ரூபாய் க்கு விற்பனை

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி , சட்டப்பாறை , கணக்கம்பட்டி , கோம்பைப்பட்டி , மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் விளைவிக்கப்படும் கொய்யா பழங்கள் ஆயக்குடி கொய்யா சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொய்யாப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ 10 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கொய்யாப்பழத்தின் வரத்து குறைவு காரணமாக கொய்யாப்பழம் விலை விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விவசாயிகள் விற்பனை செய்யபடுகின்றனர். இதனை வாங்கும் வியாபாரிகள் தரம் பிரித்து வெளியூர்களுக்கும் , வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லபடும் கொய்யாபழம் 22 கிலோ அடங்கிய ஒரு பெட்டியின் விலை 1200 முதல் 1500 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆயக்குடி கொய்யா பழத்திற்கு புவி சார் குறியீடு வழங்க வேண்டும் , பழரச தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி