பழனியில் இன்று காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், திடீரென மாலை நேரத்தில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் சாலை ஓரத்தில் இருந்த நிழல் குடையின் கீழ் தஞ்சமடைந்தனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.