உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

58பார்த்தது
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம்தேதி அன்று உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பழனி அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் கொடி அசைத்து பேரணியை துவக்க வைத்தார்‌. தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியானது பழனி அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகளில் பேருந்துநிலையம் வழியாகச் சென்று மீண்டும் அரசு பேரணியில் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.

பேரணியில் தற்கொலை எண்ணத்தை கைவிடுவது, தற்கொலை என்பது கோழைத்தனம், தற்கொலை எண்ணம் வந்தால் மருத்தவ ஆலோசனை பெறுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமெழுப்பியபடி சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவர்கள் ஸ்ரீதர், காந்தி, சசிகலா உள்பட தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி