45 ஆண்டுகால நடைமுறையை மாற்றிய தமிழ்நாடு அரசு!

71பார்த்தது
45 ஆண்டுகால நடைமுறையை மாற்றிய தமிழ்நாடு அரசு!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு, 45 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு அரசு சார்பில் அசைவ உணவு வழங்கப்பட்டது. சைவ பிரியர்கள் 50 பேர் தவிர மீதமுள்ள 722 பேருக்கு கடந்த திங்கள் கிழமை அசைவ உணவு வழங்கப்பட்டது! சிகிச்சையில் உள்ளவர்கள் சாப்பிடத் தெரியாமல் எலும்புகளை அப்படியே விழுங்கி விடுவதால் கடந்த 1980ம் ஆண்டு அசைவ உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. இனி வாரத்தில் புதன், சனி ஆகிய 2 நாட்களுக்கு அசைவ உணவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி