திண்டுக்கல் மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, விநாயகர் சதுர்த்தி விழாவில் கிரிவலப் பாதையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக் கூடாது, கிரிவலப் பாதை வழியாக வருவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி பழனி கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் திருவளவன், பிஆர்ஓ பொதினிவளவன், பாவேந்தன், ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.