

திண்டுக்கல்: 500 க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட யோகா போட்டி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. மூன்று வயது முதல் 18 வயது வரையிலான போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் கற்ற யோகாசனங்களை செய்து காட்டினர். போட்டியில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி என 20 மாவட்டங்களில் இருந்து வந்த 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்ட ஐந்து வயது சிறுமிகள் உடலை வில்லாக வளைத்து சக்கராசனம், புஜங்காசனம், விருச்சிகாசனம், சிரசாசனம், ஓம்காரஆசனம், கண்டபேருண்டாசனம் உள்ளிட்ட பல யோகாசனங்களை செய்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அடுத்த மாதம் வாரணாசியில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.