திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பழனி நகர் கிழக்கு மேற்கு ஒன்றியம் மற்றும் பால சமுத்திரம் நெய்க்காரப்பட்டி ஆயக்குடி பேரூர் கழக திமுக சார்பில் உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் பழனியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை வீடுதோறும் சென்று எடுத்துரைக்க வேண்டும். முதலமைச்சரின் உத்தரவின் படி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியினரின் செயல்பாடுகள் ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார்.
பின்னர் பாஜக ஒன்றிய அவை தலைவர் அசோக் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பாஜகவினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.