திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுடன் மனு அளிக்க வந்தனர். நிலக்கோட்டை நடுப்பகுதியில் கடந்த ஆண்டு, ஆண்டவன் என்பவரும், ஒட்டன்சத்திரம் தோப்புபட்டி சேர்ந்த பாலமுருகன் மற்றும் திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டி பட்டதாரி பாலமுருகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாங்கரையில் 4 பட்டியலின நபர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரியார் நகரில் இரண்டு மைனர் குழந்தைகளை கடத்தி கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் நடந்து ஓராண்டு ஆன நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ். சி, எஸ். டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் புதிய திருத்தங்களின விதிமுறைகள் படி வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகை, அரசு வேலை, குடும்ப ஓய்வூதியம், இரண்டு ஏக்கர் நிலம், இலவச வீட்டு மனை பட்டா இவைகள் வழங்கப்பட வில்லை. இதை கேட்க சென்றால் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முறையாக பதில் அளிப்பதில்லை. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் நடந்து வருகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆதி திராவிடர் நலத்துறை மானிய கோரிக்கைக்கு முன்பாக சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.