திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமங்களான வட கவுஞ்சி செம்றான் குளம் கருவேலம்பட்டி பட்டியல் காடு பூதமலை குரங்கணி பாறை கோரன்கொம்பு குறவஞ்சி ஓடை மற்றும் வயக்காடு ஆடலூர் பன்றிமலை பகுதிகளில் அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் கொடைக்கானல் அல்லது தாண்டிக்குடியில் இருந்து வரும் சூழ்நிலை உள்ளது.
அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கொடைக்கானலில் இருந்து சுமார் 40 முதல் 60 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்ல இருப்பதால் அவசர காலங்களில் வாடகை வாகனங்களில் அதிக பணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தன
இந்நிலையில் அப்பகுதி பழங்குடியின பெண்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலை இருந்து வந்தது.
மேலும் தற்போது 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளரால் 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்றனர்.
இதனால் கீழ் மலை கிராம மக்கள் கோடை குறிஞ்சி மகளிர் இயக்கம் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் பாராட்டி வருகின்றன.