கொடைக்கானல்: நீர்நிலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி

63பார்த்தது
தமிழகம் முழுவதும் நீர் நிலை கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது,
இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனகோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், மன்னவனூர், தேவதானப்பட்டி, பெருமாள்மலை உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் நீர் நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது, இதில் வனத்துறையினர், பறவை இன ஆர்வலர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 80 -க்கும் மேற்பட்டோர் குழுக்கள், குழுக்களாக பிரிந்து நீர் நிலை பறவை கணகெடுப்பு பணியானது நடைபெற்றது. குறிப்பாக இதில் கொடைக்கானல் வன சரகத்திற்கு உட்பட்ட மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கத்தில் 10க்கும் மேற்பட்டோர் பறவை கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் தாலை கோழி, முக்குளிப்பான், மீன் கொத்தி, புஷ் செட், நீலகிரி பிளை கேட்சர், இந்தியன் ஒயிட் ஐ, பான்ட் ஹரன், ஒயின் திரோட் கிங் பிஷர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டு குறிப்பு எழுதப்பட்டது.
மேலும் பறவைகள் கணக்கெடுப்பு முடிந்த உடன் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகள் உள்ளிட்டவைகள் சென்னை வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டு தமிழகம் முழுவதும் நீர் நிலை பறவை கணக்கெடுப்பு முடிவுகள் தலைமை வனத்துறை சார்பில் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா சான்றிதழ்களை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி