திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மின்வாரியம் நகர் பிரிவு அலுவலகம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த மின்வாரிய அலுவலகம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் வத்தலகுண்டு துணை மின் நிலைய அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வத்தலக்குண்டு பகுதியில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த வத்தலக்குண்டு நகர் பிரிவு மின்வாரிய அலுவலகம் தற்போது பில்டிங் சொசைட்டி தெருவில் 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மாற்றம் செய்யப்படவுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் எனவும், கிராமத்திலிருந்து வருபவர்கள் இரண்டு பேருந்துகள் மாறி தான் புதிய அலுவலகம் செல்ல முடியும் என கூறுகின்றனர் மேலும் மின் கட்டணம் செலுத்த செல்லும்போது கூடுதல் செலவு மற்றும் அலைக்கழிப்பு ஏற்படும் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்
எனவே வத்தலகுண்டு நகர் மின்வாரிய அலுவலகத்தை மாற்றம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும் வத்தலகுண்டு மையப்பகுதியில் நிரந்தர மின்வாரிய அலுவலகம் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.