திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்வி சுற்றுலாவாக கொடைக்கானல் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சுற்றுலா அவர்களின் மனஇறுக்கத்தை போக்கும் வகையிலும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்ததாக பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் இதற்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.