திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சவுத் லயன்ஸ் கிடா முட்டு சங்கம் சார்பில் தென் மாவட்ட அளவிலான மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
கிடாய் முட்டு போட்டிகளை வத்தலக்குண்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்றனர்.
வயதின் அடிப்படையிலும் எடையின் அடிப்படையில் கிடாய்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் விடப்பட்டன.
களத்தில் விடப்பட்ட கிடாய்கள் ஆவேசமாக மோதின இதில் அதிக முட்டுகள் முட்டி கீழே விழாமல் களத்தில் நின்ற கிடாய்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.
இதேபோல் 60 முட்டுகளுக்கு மேல் முட்டி ஜெயிக்க முயன்று களத்தில் நின்ற இரண்டு கிடாய்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக முழு பரிசோதனைக்கு முன்பே போட்டிகளுக்கு கிடாய்கள் அனுமதிக்கப்பட்டன
போட்டிகளை காண ஏராளமான கிடா முட்டு ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.