திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பண்ணைப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் பாகம் முகவர்கள் ஆலோசனைப் பொதுக்கூட்டம் கன்னிவாடியில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும் ரெட்டியார் சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சிவகுருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் குட்டத்துப்பட்டி சமுதாய கூடத்தில் குட்டத்துப்பட்டி, பொன்னிமாந்துறை, அணைப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாகம் அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சார்பணி நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப அணியினர், மகளிர் அணியினர் மற்றும் இளைஞர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.