சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் அணி மற்றும் பெண்களுக்கான அணி (வீராங்கனைகள்) தேர்வு நடைபெற்றது. 32 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தமிழக அணிக்களுக்கான வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். ஹேண்ட்பால் சங்க மாநில பொதுச் செயலாளர் எம். சிவக்குமார் தலைமையில் தமிழக அணிக்களுக்கான வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
அகில இந்திய அளவில் 19 வயதிற்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 26. 03. 2025 முதல் 30. 03. 25 வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதுபோல உத்தரபிரதேசம் அலிகர் மாவட்டத்தில் பெண் வீராங்கனைகளுக்கான போட்டிகள்31. 03. 2025 முதல் 5. 4. 2025 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்கான ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு ஹேண்ட்பால் கழகத்தின் மாநிலத் தலைவர் இராமசுப்ரமணியம் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. விளையாட்டு வீராங்கனைகள் தேர்வு செய்யும் முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழக ஹேண்ட்பால் விளையாட்டு கழகமும் திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷனும், சேரன் பள்ளி நிர்வாகமும் சிறப்பாக செய்திருந்தனர்.