திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அமைந்துள்ள வெள்ளகெவி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களும், 400க்கும் மேற்பட்ட பொது மக்களும் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளகெவி கிராமத்தில் இருந்து அவசர தேவைக்கு கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம் வன பகுதிகளின் நடுவே ஆப்பாதான முறையில் நடந்து செல்ல வேண்டும்.
இந்த நிலையில் வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் மனைவி மேகலா 35, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் மருத்துவ வசதி இல்லாத நிலையில் நேற்று இரவு அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வன பகுதிகளுக்கு இடையே மேகலாவை டோலி கட்டி கும்பக்கரை வழியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரவு நேரத்தில் ஆப்பத்தான வழியிலும் , ஆற்றை கடந்தும், வன விலங்குகளின் அச்சுறுத்தல் இடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் சிரமப்பட்டு கொண்டு சென்றுள்ளனர்.
துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இது குறித்து பல முறை அரசுக்கு எடுத்துறைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெல்லகெவி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.