தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகேந்திரமங்கலத்தை அடுத்த நடுகுட்லான அள்ளி கிராமத்தில் நேற்று இரவு மின் இணைப்பை துண்டித்து விட்டு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்து ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகள், ஆயிலை திருடி சென்றனர்.
நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்த கிராம மக்கள், அடுத்த நாள் காலை டிரான்ஸ்பார்மர் உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜக்கசமுத்திரம் துணை மின் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் உடைக்கப் பட்டு காப்பர் கம்பிகள், ஆயில் திருடி சென்றது தெரிய வந்தது இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.