திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை, இன்று (அக்.24) நடைபெற்றது. அப்போது, “சாமி தரிசனத்திற்கு 1000, 2000 என வாங்கினால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்?. ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா?. பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா?” என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.