அரூர்: பயிர்களுக்கு காப்பீடு செய்ய அதிகாரிகள் அழைப்பு
தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் இன்று(அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2024-25ம் ஆண் டில் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-2, ராகி, மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் கரும்பு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகள் நெல்-2 காப்பீடு செய்ய ஏக்கருக்கு 556. 26யை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ராகி பயிருக்கு ஏக்கருக்கு 227. 90யை வரும் 30.12.2024க்குள்ளும், மக்காச்சோளம் ஏக்கருக்கு 5, 392. 83யை வரும் 30. 12. 2024க்குள் ளும், நிலக்கடலை ஏக்க ருக்கு 319.36யை வரும் 30. 12. 2024க்குள்ளும், கரும்பு ஏக்கருக்கு வரும் 31. 03. 2025 க்குள்ளும் செலுத்த வேண்டும். விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மற்றும் பொது இ-சேவை மையங்களில் பதிவு செய் யலாம். விவசாயிகள் காப்பீடு செய்யும் போது, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட, பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.