அரூர்: புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் தற்போது புதியதாக விசாலமான பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று மாலை அக்டோபர் 24 நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கேஎன். நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1725 பயனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் எம்பி மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தங்கம் சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி