அரூர் - Harur

பொம்மிடி: வாரசந்தையில் 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொம்மிடி அடுத்த வட சந்தையூரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் அக்டோபர் 31 நேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் சிறிய அளவிலான ஆடுகள் 3, 000 முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டு 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வியாபாரிகள் விவசாயிகள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர் மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் ரூபாய் 1 கோடிக்கு வர்த்தக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி