விழுப்புரம் மேல்பாதியைச் சேர்ந்த காவலர் சத்தியமூர்த்தி, கடந்த அக். 27-ல் நடந்த தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக பைக்கில் சென்றார். அப்போது, சாலை தடுப்பில் பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சத்தியமூர்த்தி குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.