தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குட்டூர் பகுதியில் சமீப நாட்களாக பொழிந்து வரும் கனமழையால் ஏரி நிரம்பி வரும் சூழலில், ஏரி கரையில் கனமழையின் காரணமாக இன்று திடீரென மண்ணரிப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து இன்று அக்டோபர் 26 தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி வெங்கடேஸ்வரன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடனடியாக மண் அரித்துச் சென்ற இடத்தை சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.