தேங்காய் பாலுடன், பச்சையான கற்பூரவல்லி இலை சேர்த்து வெயிலில் காயவைத்து முடியில் பூசினால் முடி அடர்த்தியாக வளரும். கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் அரைத்து உலர வைத்து எண்ணெயில் கலந்து காயவைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணிந்து முடி உதிர்வையும் தடுக்கும். முட்டையின் வெள்ளைக்கரு, வால்மிளகு இரண்டையும் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும்.