நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் சூழலில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நாளை (நவ. 12) விசாரணைக்கு வருகிறது.